“ஏய் யார்ரா நீயி?”
“நான் யாருன்னு முதல்லே பஞ்ச் டயலாக் அடிக்கணுமா இல்லைன்னா உன்னை அடிக்கணுமா?” தெலுங்கு ஹீரோ மாதிரி சொல்லிக்கொண்டே தன்னுடைய இரு கையையும் சுழற்றி வாள்மாதிரி வீசத்தொடங்கினான்.
‘படார், மடார்’. வலதும் இடதுமாக இருபுறமும் தாடையில் விழுந்தது இடியா அல்லது அடியா என்பதே அவனுக்குப் புரியவில்லை. வாயெல்லாம் உப்பு கரித்தது. தொண்டைக்கு கீழே திகுதிகுவென்று எரிச்சல். மண்டை ஓடு சிதறிப்போனதைப் போல முகமெங்கும் மரணவலி. உதட்டோரம் சூடாகவும், ஈரமாகவும், கொழகொழப்பாகவும் உணர்ந்தான். தாவாங்கட்டையை தடவிப் பார்த்தான். குபுகுபுவென்று குருதி. புனலாய் கொப்பளித்தது. கருஞ்சிவப்பாய் சிதறிய இரத்தத்தை டெரிகாட்டன் சட்டை உடனே உறிஞ்சிக்கொண்டது. கண்கள் இருண்டது. அடிபட்டவுடன் ஆறேழு அடிதூரம் பறந்துப்போய் விழுந்திருந்தான். கிறுகிறுத்துப் போய் எழுந்தவன் எதிரில் மின்னலாய் கூசவைக்கும் அவனை கண்டான். ஆறடி உயரம். ஆஜானுபாகுவாய் மார்பை விரிந்திருந்தான். இவன் உயிரினம்தானா. இல்லை அவதார் கிராபிக்ஸா என்று மண்டைக்குள் குடைச்சல்.
எமனாய் எதிரில் நின்றவன் துரைசிங்க குட்டிப்புலி. வேளச்சேரியின் வேங்கை.
கீழே விழுந்தவனின் சட்டையை கொத்தாகப் பிடித்து மேலே தூக்கி நிறுத்தினான். தளர்ந்துப் போய் நின்று வெறித்துக் கொண்டிருந்தவனிடமிருந்து நான்கடி பின்னால் நகர்ந்தான் புலி. வலதுகாலை நெட்டுக் குத்தலாக தொண்ணூறு டிகிரிக்கு நேராக்கி, அவனுடைய மார்புக்கு நேராக நிறுத்தினான். முட்டியை மடக்கி லேசாக காலை உள்வாங்கினான். இடதுகாலை தரையில் அழுத்தி, புவியீர்ப்புக்கு சவால் விட்டு இரண்டடி மேலே பறந்து மடக்கிய வலதுகாலை ராக்கெட் வேகத்தில் விடுவித்தான். எதிரில் நின்றுக் கொண்டிருந்தவனின் மார்பில் ‘தொம்’மென்று சத்தம். இம்முறை அவன் பத்து, பதினைந்து அடி தூரத்துக்கு பறந்துச் சென்று விழுந்தான். அந்தரத்தில் பறந்து ‘கிக்’ அடித்த புலி, வாகாக பேலன்ஸ் செய்து தரையில் இரு கால்களையும் ஊன்றி ஸ்டைலாக நின்றான்.
துரைசிங்க குட்டிப்புலியின் ஆக்ஷன் அறிமுகக்காட்சி ஓவர். காக்கிச்சட்டை போட்டு அடிவாங்கியவன் போலிஸ்காரனா, ஆட்டோ டிரைவரா, பஸ் கண்டக்டரா, ஃபேக்டரி லேபரா என்பதையெல்லாம் வாசகர்களே முடிவு செய்துக்கொள்ளலாம். ஏன் அடித்தான், எதற்கு அடித்தான் என்பதற்கான காரணங்களையும் நீங்களே கற்பனையில் உருவாக்கிக் கொள்ளலாம். உங்களுக்குத் தெரியவேண்டியது ஒன்றே ஒன்றுதான். கண்ணெதிரில் அநியாயத்தைக் கண்டால் அடக்குவான். அத்துமீறலுக்கு அடங்க மறுப்பான். அவனுடைய வாய் பேசாது. கையும் காலும்தான் முதலில் பேசும். தொழில்தான் கொஞ்சம் பேஜாரு. அரசியல் ரவுடிகளின் அல்லக்கை.
“புது ஏசி தீ மாதிரி இருக்காண்டா புலி. நம்ம பயலுகளை பார்த்த இடத்துலே எல்லாம் புடிச்சி உள்ளே போடுறான். வழக்கமான வழியிலே சரிகட்டலாமுன்னு பார்த்தா எதுக்கும் ஒத்துவர மாட்டேங்கிறான். அமைச்சருக்கும் அடங்கமாட்டேங்கிறான். ஒரு நடை ஸ்டேஷனுக்கு போய் பார்த்து, பேசிட்டு வா” அம்பலவாணன் சொன்னார். உள்ளூர் அரசியல் கை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறினாலும் எப்போதும் ஆளுங்கட்சியிலேயேதான் இவர் இருக்கிறார். எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சிக்கு மாறிவிடுவது இவர் வழக்கம். மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பல்லக்கு தூக்கி. பலனாக உள்ளூர் காண்ட்ராக்ட்கள், டாஸ்மாக் பார்களை ஏலம் எடுப்பது, கட்டப் பஞ்சாயத்து, நிலங்களை வளைத்துப் போடுவது என்று சட்டத்தை சாயம்போக செய்யும் வேலைகளை செவ்வனே செய்து வருகிறார்.
அம்பலவாணனிடம் பேசிவிட்டு வெளியே வந்தான் புலி. ஸ்கார்பியோ கதவு திறந்தது. “வேளச்சேரி ஸ்டேஷனுக்கு விடுறா”. விர்ரூம். தரமணிச் சாலையில் தாறுமாறான வேகத்தில் கிளம்பிய கார், விஜயநகரில் வலதுபுறமாக திரும்பியது. அசுரவேகத்தில் எதிரில் வந்த மண்லாரி சடன் பிரேக் அடித்து நிலைகுலைந்தது. லாரிக்கு பின்னால் வந்த டூவீலர்காரன் ஒருவன் திடீர் பிரேக்கால் அதிர்ச்சியுற்று, லாரியின் மீது மோதி கீழே விழுந்தான். வேகத்தைக் குறைக்காமலேயே வேளச்சேரி காவல் நிலையம் வந்து, வாசலின் கான்க்ரீட் தரை தேய பிரேக்கை மிதித்து, டயருக்கு அடியில் இருந்து தீப்பொறிகளும், புகையும் வருமளவுக்கு ‘க்ரீச்’ சத்தமிட்டு, ஸ்கார்பியோவை நின்ற வாக்கிலேயே ஸ்டைலாக ‘யூ’டர்ன் அடித்து லாகவமாக நிறுத்தினான் டிரைவர். வண்டி நிற்பதற்கு முன்பாகவே கதவை திறந்து, ரீபோக் ஷூ தொப்பென்று சப்திக்க, துள்ளிக்கொண்டு புயலாய் குதித்தான் புலி (இக்காட்சியை டாப் ஆங்கிள் கேமிரா வியூவில், ஐந்துவினாடி ஸ்பீட்மோஷன் காட்சியாக கற்பனை செய்து வாசிக்கவும்).
ஸ்டேஷனுக்கு உள்ளே இருந்து வெளியே கையில் ஃபைலோடு வந்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஆச்சரியமாக புலியை ஏறிட்டார்.
“உள்ளே ஏ.சி. இருக்காரு புலி. புதுசா வந்திருக்காரு. ஒருமாதிரி ஆளு. அப்புறமா வா. பார்த்துக்கலாம்”
இடக்கையால் அவரை லேசாக தள்ளிவிட்டு, ரிசப்ஷனுக்குள் நுழைந்தான். ஏதோ எழுதிக்கொண்டிருந்த ரைட்டர் அவசரமாய் மேலதிகாரிக்காக எழுந்து நிற்பதைப்போல அட்டென்ஷனில் இவனைப்பார்த்து எழுந்தார்.
“எங்கேய்யா இருக்கான் அந்த புது ஏசி?” முகத்தில் வலிய கடுப்பையும், கொடூரத்தையும், கோபத்தையும் கொண்டுவந்து குரல் உயர்த்தி கேட்டான்.
ரைட்டர் அமைதியாக அறையை சுட்டினார். கதவை காலால் உதைத்து, தடாரென்று சப்தித்து உள்நுழைந்தான்.
“வாடா புலி உன்னைத்தான் எதிர்ப்பார்த்துக்கிட்டிருந்தேன்” சுழல் நாற்காலியில் சுழன்றபடியே பேசினார் ஏசி ஆறுமுகவேல். தென் மாவட்டத்திலிருந்து சமீபத்தில்தான் டிரான்ஸ்பர் வாங்கி வந்திருந்தார்.
கோபமாக வந்த புலியை பேசவிடாமல், அமரவிடாமல் (அமர்வதற்கு எதிரில் நாற்காலியும் இல்லை) அவரே தொடர்ந்தார்.
“பொறந்து வளர்ந்தது நங்கநல்லூர். வீட்டிலே வெச்ச பேரு துரைசிங்கம். சின்ன வயசுலே ஸ்கூல் ஓட்டப்பந்தயத்துலே வேகமா பாய்ஞ்சி ஓடுவேன்னு வாத்யார்கள் சூட்டின செல்லப்பேரு புலி. குட்டிமணியை புடிக்கும்னு சொல்லிட்டு நீயா சேர்த்துக்கிட்டது குட்டி. அப்பா மார்க்கெட்டில் பழக்கடை வெச்சிருந்தாரு. தொண்ணூத்தி ஒண்ணுலே ராஜீவ்காந்தி மர்டர் அப்போ கடையை எரிச்சிட்டானுங்க. கடைக்குள்ளே தூங்கிக்கிட்டிருந்த உங்க அப்பாவும் அப்போ தீயிலே மாட்டி செத்துட்டாரு.
கடையை எரிச்சவனுங்க ஒவ்வொருத்தனையா கேப்பு விட்டு ஸ்பாட்டு வெச்சி, திட்டம் தீட்டி நரி மாதிரி போட்டுத் தள்ளிட்டே. சொல்லி வெச்சா மாதிரி அதுலே சம்பந்தப்பட்ட நாலு பேரு பொணமும் மீனம்பாக்கம் ரயில்வே கேட்டு பக்கத்துலே தண்டவாளத்துலேதான் கிடைச்சிது. எல்லாத்தையுமே தற்கொலைன்னு போலிஸ் ஊத்தி மூடிடிச்சி. மூடவெச்சே.
செத்தவனுங்களோட ஆளுங்க அதுக்கு காரணம் நீதான்னு தெரிஞ்சி, உன்னை போடறதுக்கு தேடினப்போ அடைக்கலம் தேடி இந்த ஏரியாவுக்கு வந்தே. இங்கே சின்ன சின்ன சண்டை, பஞ்சாயத்துன்னு வளர்ந்து இன்னிக்கு வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், தரமணி, அடையாறு வரைக்கும் நெம்பர் ஒன் ரவுடியா, அரசியல்வாதி அம்பலவாணனோட ஆயுதமா வளர்ந்திருக்கே...”
எதுஎதுவோ பேசலாம் என்று மனதுக்குள் டயலாக் ஒத்திகைப்பார்த்து, தெளிவாக ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு போகலாம் என்று வந்த புலி மிரண்டான்.
“உன்னோட ஜாதகம் மட்டுமில்லே புலி. இந்த ஏரியாவில் இருக்குற நண்டு, சிண்டு பயல்களோட ஜாதகம் மொத்தமும் என்னோட லேப்டாப்புலே. உங்களை எல்லாம் புடிச்சி, ஜெயில்லே சோறு போட்டு உடம்பு தேத்தி மறுபடியும் ரவுடித்தனத்துக்கு ரெடி பண்ணி அனுப்பற சொம்பை போலிஸ் இல்லைடா நானு. ஆறுமுகவேல், ஐ.பி.எஸ்., அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ். மதுரைக்கு அந்தப்பக்கமா வெசாரிச்சிப் பாரு. அல்லக்கையில் தொடங்கி அரசியல்வாதி வரைக்கும் அலறுவானுங்க. வார்ன் பண்ணறேன். நீயும் நிறுத்திக்கோ. அம்பலவாணனையும் எல்லாத்தையும் நிறுத்திடச் சொல்லு. இல்லேன்னா ஒவ்வொருத்தனயா மண்ணுக்குள்ளே புதைச்சி மரம் நட்டுடுவேன்”
அந்த வினாடியே ஆறுமுகவேலை போட்டுத்தள்ள வேண்டும் போல புலிக்கு கை அரிப்பெடுத்தது. எலெக்ஷன் நேரத்தில் எகனைமொகனையாக எதையும் செய்துவிடக்கூடாது என்று அம்பலவாணன் ஏற்கனவே எச்சரித்திருந்ததால் கடுப்புடன் திரும்பினான்.
“நம்ம ஆளுங்க முப்பத்து எட்டு பேரை ஆறுமுகவேலு இதுவரை என்கவுண்டர்லே போட்டுட்டான் புலி. அனேகமா அடுத்தது நீயும் நானும்தான். மினிஸ்டராலே கூட எதுவுமே செய்யமுடியலை. அவன் சீஃப் மினிஸ்டரோட டைரக்ட் காண்டாக்ட்லே இருக்கானாம். கொஞ்சநாளைக்கு எங்கிட்டாவது வெளியூருக்கு எஸ்கேப் ஆயிடு. நானும் எல்லா கனெக்ஷனையும் கட் பண்ணிட்டு தலைமறைவா இருக்கப் போறேன்” செல்போனில் பேசி முடித்துவிட்டு காரைவிட்டு இறங்கினார் அம்பலவாணன்.
இடம் வேளச்சேரி ரயில்வே நிலையம். தண்டவாளத்தை கடந்து மூச்சிரைக்க நடந்தார். பின்னால் பாதுகாப்புக்கு தடித்தடியாய் இரண்டு பேர். பெரிய மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை தாண்டி ரயில்வே ஒர்க்ஷாப்பை நோக்கி நடந்தார். அங்கிருந்த பாழடைந்த கைவிடப்பட்ட பங்களாவுக்குள் நுழைந்தார். படிகள் ஏறினார். பூட்டப்பட்டிருந்த ஒரு கதவை சாவிகொண்டு திறந்தார். உள்ளே நவநாகரிகமாக இண்டீரியர் செய்யப்பட்ட சொகுசு அறை.
“அடுத்து ஒரு மாசத்துக்காவது நான் இங்கேதாண்டா இருக்கப் போறேன். வேளாவேளைக்கு சாப்பாடு கொண்டாந்து கொடுத்துடுங்க. ஜாக்கிரதை. யார் கண்ணுக்கும் படாம இங்கே வரணும். செல்போன் சுவிட்ச் ஆஃப் பண்ணியிருப்பேன்” கூடவந்த தடியர்களிடம் சொன்னார். அவர்கள் இருவருமே வெளியூர் ஆட்கள் என்பதால் உள்ளூரில் யாருக்கும் சந்தேகம் வராது.
கதவைத் தாழிட்டு பெட் மீது படுத்தார். ஏசி போட்டார். டிவியில் செய்திகள் பார்த்தார். ‘பிரபல தாதா அம்பலவாணன் தலைமறைவு. போலிஸ் வலைவீச்சு’. இருபத்தைந்து ஆண்டுகளில் இவ்வளவு மோசமான நிலைமை அவருக்கு வந்ததேயில்லை. ஆரம்பத்தில் சிறு சிறு அடிதடி. பிறகு கொஞ்சம் பெரிய குற்றங்கள். அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் தேவைப்பட்டால் குழைவார். ஒத்துப்போகாவிட்டால் கழுத்தறுப்பார். ஒருக்கட்டத்தில் சட்டத்துக்கோ, சமூகத்துக்கோ அடங்காத அளவுக்கு அதிகாரத்தை பெற்றுவிட்டார். இப்போது சர்வதேச அளவில் ‘நிழல்’ தொழிலின் ஓர் அங்கம். தாய்லாந்து மாஃபியா குழுவின் அங்கீகரிக்கப்பட்ட இந்திய ஏஜெண்ட்.
கதவு கொஞ்சம் வேகமாகவே பொறுமையின்றி தட்டப்பட்டது. “இப்போதானே போனானுங்க. அதுக்குள்ளே எதுக்கு திரும்ப வந்திருக்கானுங்க” தனக்குள்ளாகவே சிறுகுரலில் முணுமுணுத்துக்கொண்டு தாழ் திறந்தார்.
அய்யோ. மஃப்டி உடையில் ஆறுமுகவேலு.
ஒன்றுமே பேசாமல் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு நிமிடத்துக்கு முறைத்து பார்த்துக்கொண்டார்கள். அடுத்த நிமிடம் ஆரத்தழுவிக் கொண்டார்கள். அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினார்கள். கையில் வைத்திருந்த பையை அம்பலவாணனிடம் கொடுத்தார் ஆறுமுகவேலு.
“போலி பாஸ்போர்ட், தாய்லாந்துக்கு விசா, ஃப்ளைட் டிக்கெட் எல்லாம் ரெடி தலைவா. இன்னைக்கு நைட்டு டேக்-ஆஃப் ஆயிடுங்க. நீங்க ஃப்ளைட் ஏறுரவரைக்கும் தமிழ்நாடு போலிஸ் உங்களை டச் பண்ணாது. அதுக்கு நான் கேரண்டி”
“ரொம்ப தேங்க்ஸ் ஆறுமுகம். உனக்கு நான் கொடுத்திருக்கிற விலை ரொம்ப அதிகம். ஆனா ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடியே இதுதான் விலைன்னு தெரிஞ்சிருந்தா, எனக்கு இவ்ளோ லாஸ் ஆகியிருக்காது”
“விடுங்க தலைவா. பழசையெல்லாம் பேசிக்கிட்டு. அப்போ எனக்கு இருந்த நிர்ப்பந்தம் அதுமாதிரி. விஷயம் என்னன்னா....”
டொக்... டொக்... டொக்...
மீண்டும் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தார் அம்பலவாணன்.
எதிரே மிடுக்கான போலிஸ் யூனிஃபார்மில் துரைசிங்க குட்டிப்புலி.
“டேய் என்னடா இது வேஷம்?”
“வேஷமா உனக்கு நான்தாண்டா விஷம்”
“டேய்... புலி”
இடுப்பிலிருந்த ரிவால்வரை எடுத்து முகத்துக்கு நேராக நீட்டினான் புலி. ஆறுமுகவேலை அறைக்குள் பார்த்தான். “அப்பவே யூகிச்சேண்டா. நீயும் ஒரு மொள்ளமாறிதான்னு. நான் வெறும் புலி இல்லைடா.. பாயும் புலி... துரைசிங்க குட்டிப்புலி, ஐ.பி.எஸ்., அசிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ். உன் கணக்கை தீர்த்துட்டா என்னோட அண்டர்கவர் ஆபரேஷன் முடிவுக்கு வந்திடும். வெளிப்படையாவே போலிஸா வாழ ஆரம்பிச்சிடுவேன்”
“டேய் புலி. இது விளையாடற நேரமில்லை..”
“எட்டு வருஷத்துக்கு முன்னாடியே ஐ.பி.எஸ். டிரைனிங் முடிச்சிட்டேன். சென்னையில் இயங்கிக்கிட்டிருக்கிற மாஃபியாவை ஒடுக்குகிற ஸ்பெஷல் ஆபரேஷனோட கமாண்டண்ட் நான்தான். ஆறுமுகவேலு என்னோட சப்போர்ட்டிங் ஆபிஸர். ஆனா அவனுக்கே இது தெரியாது. இவ்வளவுநாளா சீக்ரட் இன்வெஸ்டிகேஷன் பண்ணி ஃபுல் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன். களையெடுப்பு வேலையையும் சக்சஸ்ஃபுல்லா முடிச்சாச்சி. கடைசி களை நீதான். உன்னை முடிச்சிட்டு அடுத்து தாய்லாந்துக்கு சொய்ங்... அங்கே இருக்குற உன்னோட தலைவனுங்களுக்கு இருக்குடி ஆப்பு” கையை பறப்பது போல செய்துக்காட்டி சொன்னான்.
“இதையெல்லாம் நம்பவே முடியலையே?” அதிர்ச்சியில் உறைந்துப்போயிருந்த ஆறுமுகவேலு சொன்னான்.
“ஏண்டா இதே கதையை சினிமாவுலே காட்டுனா நம்புவீங்க. சிறுகதையிலே வந்தா நம்பமாட்டீங்களா” ரிவால்வரின் விசையை துரைசிங்கப்புலி அழுத்துவதற்கு ஒரு வினாடி முன்பாக அம்பலவாணன் சுதாரித்தார். புலியின் மீது புலிப்பாய்ச்சலாக பாய்ந்தார். அவனுடைய இரு கைகளையும் பிடித்து மடக்கி, முழங்காலில் ’அட்டாக்’ போட்டார்.
வலிதாங்காமல் முட்டிப்போட்டு அமர்ந்தான் புலி. தூண் மாதிரி இருந்த தன்னுடைய காலை தூக்கி அவனுடைய பின்னங்கழுத்தில் வைத்து சிசர்ஸ் கட் போட்டார் அம்பலவாணன். கழுத்து நெறிபட்டு மூச்சுவிட முடியாமல் திணறினான் புலி. ஆறுமுகவேலு முகத்தில் மாறி மாறி குத்த ஆரம்பித்தான். சில்மூக்கு சிதறி இரத்தம் பீய்ச்சிட்டது.
அதே நேரம் புலியுடைய கை நைச்சியமாக கீழே இறங்கி ஷூவை தடவியது. ஷூவின் பின்பக்க பாட்டத்தில் ரகசியமாக மறைத்துவைக்கப்பட்ட உள்ளங்கையளவு சிறு ரிவால்வரை எடுத்தான். புலியின் கழுத்தை நெருக்குவதில் மும்முரமாக இருந்த அம்பலவாணன் இதை உணரவில்லை.
‘டிஷ்யூம்’ சைக்கிள் டயர் பஞ்சர் ஆனதைப்போல கமுக்கமான சத்தத்தை வெளிப்படுத்தியது மினி ரிவால்வர். இடுப்புக்கு கீழே ரத்தம் வர, அந்த இடத்தை பிடித்துக்கொண்டு தள்ளிப்போய் பெட் மீது விழுந்தார் அம்பலவாணன். இன்னொரு ‘டிஷ்யூம்’. இம்முறை கழுத்தில் குண்டு பாய்ந்து அதைப்பிடித்துக்கொண்டே ஆறுமுகவேலும் பெட்டின் மீது போய் விழுந்தான்.
தூரத்தில் போய் விழுந்திருந்த ரிவால்வரை கையில் எடுத்தான் புலி.
‘டுமீல்’ ‘டுமீல்’
அடுத்தடுத்து இரண்டு ஹெட் ஷாட். முன்தலை பிளந்து பிணமானார்கள் அம்பலவாணனும், ஆறுமுகவேலுவும். தூரத்தில் மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவர்கள், எங்கோ பட்டாசு வெடிப்பதாக நினைத்துக்கொண்டு விளையாட்டை தொடர்ந்தார்கள். ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பங்களாவுக்கு வெளியே வந்த துரைசிங்க குட்டிப்புலி, ஐ.பி.எஸ் தன்னுடைய டாடா சுமோவில் ஏறினான். “இந்த கதையிலே ஹீரோயின் மட்டும் இருந்திருந்தா இன்னும் அமர்க்களமா இருந்திருக்கும். எவ்வளவு மொக்கையா ட்விஸ்ட்டு கொடுத்தாலும் நம்பாளுங்க நம்பிடறானுங்களே?” அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் மெதுவாக சொல்லிவிட்டு, செல்போனை எடுத்தான். எண்களை ஒத்தினான்.
“மினிஸ்டர் சார். சக்சஸ்ஃபுல்லா முடிச்சிட்டேன். இனிமே நான்தான் இந்த ஊருக்கு அம்பலவாணன்”