Wait is over.
தேசத்துரோகியான ஒரு காவல்துறை அதிகாரியை, நேர்மையான உளவுத்துறை அதிகாரியான விஜய் விசாரணை செய்கிறார். அவருடைய அலுவல்ரீதியான துப்பாக்கியையும், ஒரு இல்லீகல் துப்பாக்கியையும் டேபிள் மீது எடுத்து வைக்கிறார். உளவுத்துறை அதிகாரி ஏதாவது ‘பஞ்ச்’ டயலாக் அடித்துவிடுவாரோ என்கிற மரண அச்சத்தில், தேசத்துரோகி இல்லீகல் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். க்ளைமேக்ஸிலும் நேர்மையற்ற ஒரு மிலிட்டரி அதிகாரி, இதே பஞ்ச் டயலாக் பயத்தில் இதே போல தற்கொலை செய்துக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் சிவாஜியின் ‘ஆபிஸ் ரூம்’ காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

வழக்கமான விஜய் ஃபார்முலா படமல்ல இது என்பதற்கு இக்காட்சிகளே அத்தாட்சி. திருப்பாச்சி காலத்தில் தனக்கே தனக்கென்று உருவான தனித்துவ ஃபார்முலாவை உடைக்கும் துணிச்சலான முயற்சியை ‘நண்பன்’ ஒப்புக்கொண்டபோதே விஜய் தொடங்கிவிட்டார். துப்பாக்கியில் இது முழுமை பெற்றிருக்கிறது. எவ்வளவு நாளைக்குதான் தமிழ்நாட்டிலேயே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருப்பது என்கிற அலுப்பு அவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். துப்பாக்கி தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்கிற செய்தி தேனாக காதில் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படலாம். கேரளாவிலும் ஹிட். இந்திய தேசிய உணர்வுகொண்ட திரைப்படம் என்பதால் எஃப்.எம்.எஸ்.ஸிலும் கதறக் கதற கல்லா கட்டப்போகிறது. இந்த தீபாவளி ‘தள’தீபாவளி.
இளையதளபதிக்கு வருடா வருடம் வயது குறைந்துக்கொண்டே போகிறது. மிக விரைவில் அவர் குழந்தை நட்சத்திரமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்மார்ட்டில் கில்லி, ஆக்ஷனில் போக்கிரி என்று துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் ஷோ. முழுநீஈஈஈள திரைப்படமென்றாலும், இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தளபதியை ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டே இருக்கமாட்டோமா என்று படம் முடிந்ததும் ஏக்கம் பிறக்கிறது.
ஏழாம் அறிவு மொக்கையாகி விட்டதால், துப்பாக்கியின் திரைக்கதையை சிரத்தையெடுத்து செதுக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக் மரண மாஸ். ஒரு காட்சியில் நாயை ஸ்க்ரீனில் பார்த்து தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. இராம.நாராயணனின் முந்தைய நாய், குரங்கு, பாம்பு ரெக்கார்டுகளை எல்லாம் இக்காட்சியில் அசால்ட்டாக உடைத்து எறிந்திருக்கிறார் முருகதாஸ். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ஹீரோவுக்கும், இயக்குனருக்குமே ஒதுக்கப்பட்டு விட்டதால், பிரும்மாண்டமான ஸ்க்ரிப்டுக்கு கருக்காக செலவு செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் பிரதிபாகாவேரி மாதிரியான பெரிய கப்பல் வெடிக்கும்போது, ஊசிப்பட்டாசு வெடிப்பதைப் போல ஃபீலிங். போலவே போஸ்ட் ப்ரொடக்ஷன் ஏனோதானோவென்று இருக்கிறது. நேற்று வந்த நாளைய இயக்குனர்களே இந்த மேட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும்போது, தமிழின் சுபாஷ்கய்யான முருகதாஸ் இன்னமும் ரமணா, கஜினி காலத்திலேயே தேங்கிப் போய் கிடக்கிறார்.
ஹீரோயின் காஜல். வழக்கம்போல தொட்டுக்க ஊறுகாய்தான். இருந்தாலும் மணம், குணம், நெடி நிரம்பிய காரமான மிளகாய் ஊறுகாய். எப்போதும் ‘ஹாட்’டாக சுர்ரென்று இருக்கிறார். முதல் இரவில் புதுக்கணவன் உதடை கடித்து வைத்துவிடுவானோ என்று பதட்டப்படும் புதுப்பொண்ணை மாதிரியே எல்லா சீனிலும் பரபரவென்று ரியாக்ஷன். முத்தத்துக்கு தயாராகி உதடுகளை தயார்படுத்தும் அழகுக்காகவே காஜலுக்கு பாரதரத்னா வழங்கலாம். இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா?’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் ‘ஒரிஜினல் டெவலப்மெண்ட்’தான் என்பதை இறுதியில் ஊர்ஜிதம் செய்துக்கொள்ள முடிந்தது. சந்தேகம் கிளப்பிய தோழரை 66-ஏவில் உள்ளே தள்ளலாம்.

வாராது வந்த மாமணியாய் இளையதளபதி ஓர் ஒரிஜினல் ஹிட் அடிக்கும்போது திருஷ்டிப் படிகாரமாய் ஹாரிஸ் ஜெயராஜ். ‘கூகிள் கூகிள்’ (இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) பாடலைத் தவிர்த்து, வேறெதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூகிள் பாடலில், ஷங்கர் ஸ்டைலில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். விஜய் படமாச்சே என்று, க்ளைமேக்ஸுக்கு முன்பு குத்து, குத்துவென ஒரு குத்துப்பாட்டை எதிர்ப்பார்த்தால், ஒரு சோகையான டூயட். மெலடியான தேசபக்திப் பாடலும் (ஜேசுதாஸ்?) படம் முடிந்தபிறகே வருகிறது. எவ்வளவு மரணமொக்கையான விஜய் படமென்றாலும் பாடல்கள் மட்டும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும். துப்பாக்கியில் பாடல்களும், பின்னணி இசையும் பரிதாபம். முருகதாஸின் ரமணாவுக்கு இசைஞானியின் பின்னணி இசை நினைவுக்கு வந்து ஏங்கவைக்கிறது.
வில்லன் வெயிட் என்பதால் ஹீரோ அதைவிட வெயிட்டாகிறார். கடைசியில் ‘என்னை அடிச்சியே கொல்லு’ என்று விஜய் சவால்விட, வில்லனுக்கு பக்கத்தில் இருப்பவர் ‘வேணாம். ஏதோ தந்திரம் செய்றான். அவனை உன்னாலே அடிக்க முடியாது’ என்று தரும் பில்டப்தான் ஒரிஜினல் ஹீரோயிஸம். இத்தனை காலமாக விஜய் பக்கம் பக்கமாக பேசிய பஞ்ச் டயலாக்குகள் எவ்வளவு வீண் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.
இஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ஜல்லிதான். என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் பரபரப்பான திரைக்கதை, விஜய்யின் பெர்ஃபாமன்ஸ் என்று ’போர்’ அடிக்காமல் துப்பாக்கியை பார்க்க முடிகிறது. பொதுவாக விஜய் படங்களை குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள். இப்படம் இளைஞர்களை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ‘வயலன்ஸ்’ கொஞ்சம் அதிகமென்றும் தோன்றியது. முந்தைய விஜய்யின் வயலண்ட் படங்களிலெல்லாம் ஆக்ஷன் ரசிக்கவைக்கும், திகில்படுத்தாது. துப்பாக்கியில் வெளிப்படும் ரத்தமும், புல்லட் சத்தமும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. விஜய் படத்துக்குதான் கொஞ்சம் புதுசு.
துப்பாக்கி : குறி கச்சிதம்
துப்பாக்கி : குறி கச்சிதம்